Saturday, November 25, 2006

மனதை உறைய வைக்கும் பயங்கரம் - தலித்துகள் மீது

ஒரு தலித் குடும்பம் மீது ஏவி விடப்பட்ட, அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த அராஜக வன்முறை குறித்து குமுதத்தில் வாசித்தேன். மனதை மிகவும் பாதித்தது !

மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் கயர் லாஞ்சி. அங்கே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பய்யாலால் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் விவசாயம் செய்து கௌரவத்துடன் வாழ்ந்து வந்தனர். ஆனாலும் பெரும்பான்மையாக இருந்த 'உயர்த்தப்பட்ட' சாதியைச் சேர்ந்த கயவர்கள் அக்குடும்பத்தை பல விதங்களிலும் கொடுமைக்கு உட்படுத்தி வந்தார்கள். பய்யாலாலுக்கு ஆதரவாக சித்தார்த் என்பவர் உதவி செய்ய , அந்த நபர் ஒரு நாள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டிருக்கிறார். அப்போது விதைக்கப்பட்டது, அக்குடும்பத்தினர் சந்திக்கவிருந்த பயங்கரத்தின் விதை !

காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு பய்யாலால் குடும்பத்தினர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்தது தான் வன்கொடுமையின் உச்சம் !! பய்யாலால் கண் முன்னே அவருடைய மனைவி, மகள் மற்றும் இரண்டு மகன்களை ஊரைச் சேர்ந்த 'உயர்த்தப்பட்ட' சாதியைச் சேர்ந்த 'தெரு நாய்கள்' தெருவில் இழுத்துச் சென்று, நிர்வாணமாக்கி பயங்கரமாக அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அண்ணனையும், தங்கையையும் எல்லார் முன்பும் உடலுறவு கொள்ளச் சொல்லி நிர்பந்தம் செய்திருக்கிறார்கள் ! அவர்கள் மறுக்க, பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் குச்சிகளால் துளைத்துச் சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

பிறகு, ஏறக்குறைய அந்த கிராமத்திலிருந்த அத்தனை 'உயர்த்தப்பட்ட' சாதி ஆண் மிருகங்களும் தாயையும், மகளையும் பகிரங்கமாக வன்புணர்ச்சி செய்து, நால்வரையும் அடித்தே கொன்று போட்டார்கள். உடல்களை ஒரு கால்வாயில் போட்டு விட்டு ஊரே கை கழுவியிருக்கிறது ! இத்தனை கொடூரங்களும் காட்டுமிராண்டி கூட்டத்தின் வெறியாட்டத்திற்கு குலை நடுங்கிப் போய் ஓளிந்திருந்த பய்யாலாலின் கண் முன்னே நடந்திருக்கிறது. காவல் துறையும் பெரிதாக நடவடிக்கை ஒன்றும் எடுக்கவில்லை.

ஊடகங்கள் மெதுவாக விழித்துக் கொண்டு இந்த அநியாய, அக்கிரம சம்பவத்தை ரிப்போர்ட் செய்த பிறகு, அங்கு பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது. ஆனாலும், பல குற்றவாளிகள் தப்பித்திருக்கிறார்கள். இன்று தனிமரமாய் நிற்கும் பரிதாபத்துக்குரிய பய்யாலால், சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் நம் நாட்டில் நிலவும் காட்டுமிராண்டித்தனமான சாதி வெறிக்கு உதாரணமாய் கதறுகிறார் !

கீழ்வெண்மணிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. உலக அரங்கில் நம்மை தலை குனிய வைத்திருக்கும் சம்பவம் இது.

நன்றி: குமுதம்

டெயில் பீஸ்: இது போன்ற, தாழ்த்தப்பட்டவர் மீதான, தினம் ஓர் அராஜக வன்கொடுமை, நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்த வண்ணம் இருக்கிறது ! நாமும் செய்தியை வாசித்து விட்டு, உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாமல், சாதி/மதம் குறித்து தினம் இணையத்தில், பயனில்லாத வகையில், தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான விஷயம் ! தீண்டாமை நிலவும் ஏதாவது ஒரு தமிழ்நாட்டு கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படவும், தாழ்த்தப்பட்டவர் நல்வாழ்வு பெறவும், கூட்டாக நாம் பங்களிக்க முடியும் என்று தோன்றுகிறது.. எவ்வாறு செய்யலாம் என்று நீங்கள் கூறுங்கள் !!!

எ.அ. பாலா

*** 262 ***

30 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment

தருமி said...

இதைப் பத்தி நிறைய எழுதணும்; பேசணும்; செய்யணும்.

மாசிலா said...

மிகவும் மனதை பாதித்த பதிவு.

இப்படியெல்லாம் பைத்தியம் பிடித்த கொலைகார அராஜக கூட்டங்கள், பொழுதுபோனதும் தாங்கள் வணங்கும் தரித்திரம் பிடித்த கடவுள்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மறுநாளும் தொடர்ந்து இதே போன்ற அட்டகாசங்களை நடத்துவது தின்னம்.

நாய் கும்பல்கள்.

ஈவிரக்கமற்ற ஜடங்கள்!

நீங்கள் கேட்ட கேட்ட கேள்விக்கு ஒரு பதில்.
(வெளிநாட்டில்) இனணையத்தில் ஒரு தொகுப்பு திறந்து இந்தியாவில் இது போன்று அநியாயம் நடத்தும், நடக்கும் அத்தனை ஊர்கள், சம்பத்தப்பட்ட பேய் குடும்பங்கள், முக்கியமாக குடும்பத்தில் உள்ள இள வாரிசுகள் ஆகியவர்களின் விலாசம், படிப்பு, வயது, புகைப்படம், பழக்கவழக்கம், சேரும் நண்பர்கள், புழங்கும் இடங்கள், எதிர்கால திட்டங்கள் அகியது போன்ற செய்திகளை மாத்திற்கு ஒருமுறை மறுபதிப்பு செய்து தொடர்ந்து பதித்து இந்த வெறிநாய்க்குட்டிகள் எங்கு மேயப்போகின்றன என்பதை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். இந்த வெறிநாய்கள் என்றாவது ஒரு நாள் சொந்த ஊரைவிட்டு வெளிநாடுக்கோ, பெரிய நகரத்திற்கோ கட்டாயம் வேலை தேடிவரும்.
அப்பொது வைக்கவேண்டும் இவர்களுக்கு வெடி.

மாசிலா said...

மக்களிடம் விழிப்புணர்வு தேவை.
நம் நாட்டில் ஊடகங்கள் பார்ப்பன மற்றும் சாதிக்கார பேய்களிடம் இருக்கும் வரை இது போன்ற அநியாயங்கள் வெளிச்சத்திற்கு வருவது மிகவும் கடினம். இதுபோன்ற காட்டுமிராண்டித்தனங்களை அம்பலப்படுத்த பத்திரிகையாளர்கள் மிகவும் அத்யாசியமான்வர்கள்.
நாட்டில் சுதந்திரம், பாதுகாப்பு, தனி மனித உரிமைகள் போன்றவகளை கவனித்து பொதுமககளுக்கு செய்திகளை திரிக்காமல், நடுநிலையுடன் அறிவித்து அனைத்து அத்துமீரல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டுவருதில் இவர்களின் பங்கு நிறைய உண்டு.
என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் இவர்கள்?

Hariharan # 03985177737685368452 said...

மனிதர்களா இவர்கள்? சாதி வெறிகொண்ட ஓநாய்கள்! சே! என்னமாதிரி ஊர்? என்னமாதிரி கேடுகெட்ட மக்கள்? கண்டிப்பாகக் களையெடுக்கப்பட வேண்டியவர்களே இதை நிகழ்த்தியிருக்கும் மிருகங்கள்!

இந்தக் கேவலமான மிருக வெறியில் சிக்கிய அந்தப் பெண்களின் மனோநிலை எப்படி இருந்திருக்கும்?
நல்லபடி வாழ உதவத்தான் மனம் வரவில்லை? என்னய்யா கொடுமை இது? வெட்கக் கேடு!


நடுங்கிப் பதை பதைக்கிறது எனது மனம்.

பிறர் மனம் நோகும்படி பேசி நடத்தலே மகாபாவம்! எப்படி மனிதனால் மிருகம் செய்யாத கேவலத்தை நடத்தமுடிகிறது?

கண்டிப்பாக தொடர்ந்து இம்மாதிரி கேவல நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக்காட்டியவாறே இருக்க வேண்டும்! காவல் துறை என்ன செய்தது? யாருக்கு/எதுக்கு காவல் இருக்கிறார்கள்?

தெய்வமே தேசத்தை மேம்படுத்து!
மக்கள் மனிதனாக நடக்க நல்ல குணாதிசயங்களோடு வழிநடத்தும் தலைவர்களைக் கொடு!

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

enRenRum-anbudan.BALA said...

ரவி, மாசிலா, தருமி , Hariharan,
தங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

என்னளவில், அந்த ஊரையே பகிஷ்கரிக்க வேண்டும் (எல்ல வகையிலும்), அதனால் சில நல்லவர்கள் பாதிக்கப்பட்டாலும் கூட ! ஒரு நாட்டின் நன்மைக்காக ஒரு ஊரையே இழக்கலாம் என்று கூறுவார்கள் இல்லையா ? முக்கியக் குற்றவாளிகள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், with enough publicity !!!

said...

இந்த நாட்டில் அன்றி வேறெந்த நாட்டிலும் இது போன்ற கொடுமைகள் நடக்காது.முதலில் ஜாதியை கண்டுப்பிடித்தவர்களை கொல்லனும்......

ஜடாயு said...

மிகக் கொடுமையான சம்பவம். இதன் பின்னணியில் இருந்தது தனி மனிதன் அல்ல, ஒரு பெரும் குழுவே என்பதைப் படிக்கும் போது ஆத்திரமும், கோபமும் வருகிறது. ஜாதி வெறி எப்படி மனிதத் தன்மையைக் கொன்றிருக்கிறது.. சே!

இந்தக் குழுவுக்கே அரசு சமூக ரீதியாகத் தண்டனை அளிக்க வேண்டும்.. like அவர்கள் யாருக்கும் அரசின் எந்த சலுகையும் கிடையாது என்பது போல - இது ஒரு முன்னுதாரணமாக, deterrant ஆக இருக்கும். இது mass அராஜகம் என்பதால் குறிப்பிட்ட ஆட்களை இனம் காட்டி மரண தண்டனை போன்றவைகள் வழங்குவது கடினம்.

நாமக்கல் சிபி said...

மிகக் கொடுமையான சம்பவம் பாலா!
:(

இவற்றைப் பார்த்துக் கொண்டு சட்டமும், காவல்துறையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டும்வரை சும்மா இருக்கிறதென்றால் இதைவிட வெட்கக்கேடு வேறொன்றும் இல்லை!

இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வலைப்பதிவர்கள் என்ற முறையில் ஏதாவது செய்யவேண்டும். விவாதிப்போம்.

நாமக்கல் சிபி said...

//என்னளவில், அந்த ஊரையே பகிஷ்கரிக்க வேண்டும் (எல்ல வகையிலும்), அதனால் சில நல்லவர்கள் பாதிக்கப்பட்டாலும் கூட //

நல்லவர்கள் என்றாலும் கூட கொடுமை நடைபெறுவதைத் தட்டிக்கேட்கவோ கண்டனம் தெரிவிக்கவோ, புகார் கொடுக்கவோ யாரும் முன்வராத பட்சத்தில் அவர்களும் குற்றத்திற்கு உடந்தையாக அல்லவா ஆகிறார்கள்.

said...

THOSE PEOPLE NEED GOOD LEADER LIKE PRABAHARAN

சல்மான் said...

தனிப்பட்ட முறையில் சராசரி மனிதத்தன்மை உள்ள நபர்கள் ஒரு குழுவின் சூழலில் (mob mentality) இந்த பயங்கரவாத கொடுமைக்கு துணை போயிருக்க கூடும். இந்த பின்னணியில் இருந்து mob mentality உருவாக்கிய ஆதிக்க வெறி பிடித்த பயங்கரவாதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனையை தருவதோடு, இந்த பயங்கரவாத சூழ்நிலை உருவாக காரணமாக இருக்கும் சமூக பின்புலங்களை களைய அரசும் மக்களும் முயல வேண்டும்.

இந்த நிகழ்வை மனிதத்தன்மைபால் கொண்ட அக்கரையோடு வலையுலக கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். தொடர்க!

துளசி கோபால் said...

படிச்சுட்டு மனசு வெறுத்துப் போச்சு. படு பாவிங்க.
அந்த மொத்த கிராமத்தையும் கொளுத்தணுமுன்னு ஒரு கோவம்.

said...

Shame Shame such a SHAME :(.
Usha

CT said...

I am so sorry to hear what happened to the family.It is upsetting. We should come out with a nice plan to kick these guys butt.........
I am looking forward to seeing taking actions on this. Not enough writing and highlighting the issues , we should see that these guys are punished under the law.

"தாழ்த்தப்பட்டவர் நல்வாழ்வு பெறவும், கூட்டாக நாம் பங்களிக்க முடியும் என்று தோன்றுகிறது.. எவ்வாறு செய்யலாம் என்று நீங்கள் கூறுங்கள் !!!"
How about make this as a project ? and brain storm to sketch an action oriented plan. I am ready to volunteer .........

--CT

பாரதி தம்பி said...

அவசியமான பதிவுதான் பாலா.குமுதத்தில் வந்தது கொஞ்சம்தான்.இந்த மாத தலித் முரசு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

தலித்துகளை மலம் திண்ண வைத்தும்,மூத்திரம் குடிக்க வைத்தும் ரசித்த மக்கள் வாழ்கிற தமிழ்நாட்டிலும் தலித் வன்கொடுமைகளுக்கு பஞ்சமில்லை.உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை..தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இன்னமும் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கவே தடை போட்டிருக்கின்றனர் ஆதிக்க சாதிக்காரர்கள்.காரணம் தலித்துகள் ஆண் நாய் வளர்த்தால்,அவை உயர்சாதிக்காரர்களின் பெண் நாய்களோடு செக்ஸ் வைத்துக்கொள்ளுமாம்.அதேநேரம் உயர்சாதிக்காரர்கள் தாராளமாக ஆண் நாய் வளர்க்கலாம்.அவை தலித் வீடுகளைச் சேர்ந்த பெண் நாய்கள் எதனோடும் உறவு வைத்துக்கொள்ளும்.அதற்கு தடையில்லை.நாய்களில் கூட ஆணாதிக்கத்தையும்,சாதி துவேசத்தையும் புகுத்தியுள்ள அந்த கிராமத்தின் உயர்சாதிக்காரர்கள் பற்றி கேள்விப்பட்டபோது,'அட நாய்ங்களா..'என்றுதான் சொல்லவேண்டியிருந்தது.

Boston Bala said...

Dalit lady’s nose is severed - ‘Land’s chastity is lost’ « Tamil News: புல் அறுத்ததால் நிலம் தீட்டாம்: தலித் பெண்ணின் மூக்கறுத்த பிகார் நில உடைமையாளர்

Chennai Online News Service - View News: “Dalit woman raped by upper caste youths”

enRenRum-anbudan.BALA said...

********************
உணர்வுகளை உள்ளார்ந்த வேதனையுடனும், நேயத்துடனும் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

CT,
Let me discuss first with like minded people in this regard and see. Thanks.

தமிழ் செல்வன் said...

(வெளிநாட்டில்) இனணையத்தில் ஒரு தொகுப்பு திறந்து இந்தியாவில் இது போன்று அநியாயம் நடத்தும், நடக்கும் அத்தனை ஊர்கள், சம்பத்தப்பட்ட பேய் குடும்பங்கள், முக்கியமாக குடும்பத்தில் உள்ள இள வாரிசுகள் ஆகியவர்களின் விலாசம், படிப்பு, வயது, புகைப்படம், பழக்கவழக்கம், சேரும் நண்பர்கள், புழங்கும் இடங்கள், எதிர்கால திட்டங்கள் அகியது போன்ற செய்திகளை மாத்திற்கு ஒருமுறை மறுபதிப்பு செய்து தொடர்ந்து பதித்து இந்த வெறிநாய்க்குட்டிகள் எங்கு மேயப்போகின்றன என்பதை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். இந்த வெறிநாய்கள் என்றாவது ஒரு நாள் சொந்த ஊரைவிட்டு வெளிநாடுக்கோ, பெரிய நகரத்திற்கோ கட்டாயம் வேலை தேடிவரும்.
அப்பொது வைக்கவேண்டும் இவர்களுக்கு வெடி.

தமிழ் செல்வன்

enRenRum-anbudan.BALA said...

வருகைக்கு நன்றி, பாஸ்டன் சார், ஆழியூரான் மற்றும் தமிழ் செல்வன்.
எ.அ.பாலா

suvanappiriyan said...

இவற்றைப் பார்த்துக் கொண்டு சட்டமும், காவல்துறையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டும்வரை சும்மா இருக்கிறதென்றால் இதைவிட வெட்கக்கேடு வேறொன்றும் இல்லை!

enRenRum-anbudan.BALA said...

நன்றி,சுவனப்பிரியன்

மாசிலா said...

அனைத்து அன்னிய இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து அச்சடித்து துண்டு பிரசுரங்கள் வடிவில் உலகத்தில் வாழும் அத்தனை அக்கறை உள்ள இந்தியர்களும் தம் சுற்றத்தில் விநியோயோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

இந்த பதிவினை படிக்கும் தமிழர்களில், நீங்கள் உங்களில் யாராவது தொழிலபதிராக இருப்பின், இது போன்ற அட்டகாசம் நடத்தும் ஊர்களில் இருந்து வரும் குடும்பத்து பிள்ளைகளுக்கு, அநியாயத்தில் குடும்பத்திற்கு சம்பந்திமிருந்தால், வேலை மறுத்துவிடுங்கள். இதே போல் சக தொழிளாலர்களும், நண்பர்களும்(?) இம்மாதிரியான பேய்கள் உங்களுடன் வேலை செய்தால் வெளிச்சம் போட்டு காட்டி விரட்டி தெருத்துங்கள். விஷக்காலாண்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதுபோன்ற கொலைகார குடும்பத்து முதலாலிகளுக்கு வேலை எதுவும் செய்யவும் கூடாது. படுபாவிகளை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி ஒதுக்கவேண்டும்.

மனிதாபமற்ற கொலைகார பாவிகளிடம் கொஞ்சமும் பாவ பரிதாபம் பார்க்கக்கூடாது.

enRenRum-anbudan.BALA said...

மாசிலா,
தாங்கள் கூறியுள்ளது போல் செய்வது மிக அவசியம். பலன் தரும்.

said...

ஆஹா..எல்லோரும் புதியதாய் ஏதோ நடந்துவிட்டது போல குதிக்கிறீர்கள்....இது என்ன இந்தியாவில் அதிசயமா?...

நோய் நாடி நோய் முதல் நாடி......

பார்ப்பனீயம் இந்தியாவிலிருந்து முற்றாக் துடைத்தெறியப்படும் நாள் தான் இவர்களுக்கு விடுதலை நாள்.

- யெஸ்.பாலபாரதி said...

கீழவெண்மணி கொடுமைகள் நடந்த போது நம் நாட்டில் படித்து பெரிய பதவிகளில் வந்தவர்களோ, சமூக விழிப்புணர்வோ குறைவு. ஆனால் இன்றைய நிலைமை மாறிவிட்டது.

//கை கூப்பி வணக்கம்
சொல்லுவதை விட..
கை குழுக்கிக்கொள்வோம்
தீண்டாமையாவது
குறையும்!!//- என்று எழுதிய திருச்சி.கவிஞர். ஒப்பிலானின் வரிகளில் இருந்து மாற்றத்தின் முதல் அடியைத் தொடங்கலாம்.

said...

""ஆஹா..எல்லோரும் புதியதாய் ஏதோ நடந்துவிட்டது போல குதிக்கிறீர்கள்....இது என்ன இந்தியாவில் அதிசயமா?...

நோய் நாடி நோய் முதல் நாடி......

பார்ப்பனீயம் இந்தியாவிலிருந்து முற்றாக் துடைத்தெறியப்படும் நாள் தான் இவர்களுக்கு விடுதலை நாள். """


ஊரில் ஒருத்தன் கு...கழுவாம போனானாம்...கேட்டால் ஊர் முழுக்க சாக்கடை நாத்தம்...அது போனதும் கழுவிக் கொள்கிறேன் என்றானாம் :(

அனானிக்கு பதில் சொல்லும் இன்னொரு அனானி

CT said...

Looks like 40 people have been arrested so far and the case has been moved to CBI.

I believe lot of people are voting for this
"என்னளவில், அந்த ஊரையே பகிஷ்கரிக்க வேண்டும் (எல்ல வகையிலும்), அதனால் சில நல்லவர்கள் பாதிக்கப்பட்டாலும் கூட ! ஒரு நாட்டின் நன்மைக்காக ஒரு ஊரையே இழக்கலாம் என்று கூறுவார்கள் இல்லையா "

I pray god all these fourty people should never be given bail adn should be hanged in public.

said...

என்னாயா லொள்ளாக்கீது,...... தலித்துன்னு பட்டுன்னு அவன் சாதியை சொல்லிப்புட்டு, கொலை பண்ணினவன் சாதியை சொல்லாம, உயர்ந்த சாதி உயர்ந்த சாதீன்னா ??

இந்த கொடுமையை செய்ந்த உயர்ந்த சாதி எந்த சாதி ?

அவங்க OBC யா ? MBC யா ? அவங்களுக்கு இட ஒதுக்கீடு இருக்குதா ?

கொஞ்சம் விவரமா சொல்லிப்போடுங்கண்ணே...

said...

இதில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் "அறுத்து" எறிய வேண்டும்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails